Movie prime

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றம்!!

 
thiruchendur
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 26 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
thiruchendur
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம், தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்க உள்ளது. 5 ஆம் நாள் திருவிழாவான வரும் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
pachai saththi
7 ஆம் திருவிழா 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடைபெற உள்ளது.

8 ஆம் திருவிழா 24 ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த திருவிழா அன்று சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வருதல் நடைபெறும்.
thiruchendur therottam
10 ஆம் திருவிழா 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 12 ஆம் திருவிழா 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் ஆவணி திருவிழா நிறைவடைகிறது.