Movie prime

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு!!

 
thirupathi
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 4.04 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
thirupathi
கோயிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் தரிசனம் சற்று அதிகமாக இருக்கும். விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருந்து வருகின்றனர்.
devotees
கோவிலில் கடந்த சனிக்கிழமை 79,525 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 39,545 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ஒரே நாளில் 4.04 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 28 அறைகளும் நிரம்பியிருந்தது. இதன் காரணமாக, இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.