Movie prime

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 
thirupathi
திருப்பதியில் ஏப்ரல் 1 ஆம் தேதியில் முதல் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடை விடுமுறையில் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அதன் காரணமாக, கோடை விடுமுறையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை மேற்கொள்ளவுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியர்களிடம் கூறியுள்ளார்.
thirupathi
அதன்படி, நடந்து சென்று மலை ஏறும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5000 டோக்கன்களும், திவ்ய தரிசனத்திற்காக ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் பரிசோதனை திட்டம் அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோடைகாலத்தில் அன்னதான கூடம் மற்றும் திருப்பதி மலையில் உள்ள இரண்டு மற்றும் நான்கு ஆகிய பல்வசதி மண்டபங்களில் செயல்படும் அன்னதான கூடங்கள், சாமி தரிசன வரிசைகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும்,திருப்பதியில் மொத்தம் 7,500 அறைகள் உள்ளன. அதில் 40,000 பக்தர்கள் தங்க முடியும். சாதாரண பக்தர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் 85 சதவீத அறைகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
thirupathi kodai oorvalam
மேலும், திருப்பதி மலையில் உள்ள அனைத்து மொட்டை போடும் மண்டபங்களிலும் கோடை காலம் முழுவதும் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டு பிரசாத விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.