Movie prime

சபரிமலையில் இன்று நடை திறப்பு!! ஆவணி மாத பூஜை!!

 
sabarimala
நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வியாழக்கிழமை சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையை முன்னிட்டு நிறைபுத்திரி பூஜைக்காக ஆகஸ்ட் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று அச்சன்கோவிலில் இருந்து நிறைபுத்திரி ஊர்வலம் நடைபெறுகிறது.
achchan kovil
இன்று அச்சன்கோவிலில் இருந்து நிர்மால்ய பூஜை முடிந்த பின்னர், நிறைபுத்திரி நெற்கதிர்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மேக்கரை, செங்கோட்டை வழியாக ஆரியங்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், புன்னல சிவன் கோயில் மற்றும் சபரிமலை செல்லும் வழிகளில் உள்ள பத்தினம்திட்டா, நிலக்கல் ஆகிய அனைத்து முக்கிய கோவில்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு இன்று மாலை 3 மணி அளவில் சபரி மலை வந்தடையும்.
sabarimala
நாளை 10 ஆம் தேதி காலை 5 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். தொடர்ந்து, 10 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். அதன் பின்னர், ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பக்தர்களை அனுமதிக்க படுவார்கள்.