மாணவர்கள் உற்சாகம்!! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!
Feb 16, 2023, 07:36 IST

தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தவிர ஒவ்வொரு மாவட்டங்களில் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு திருவிழாக்கள், அனைத்து மதங்களின் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களில் மட்டுமின்றி பெரும்பாலான ஆலயங்களிலும் இந்த மகா சிவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

அதே போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். நாளை மறுநாள் இந்த மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.