பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட நடிகை மஹாலட்சுமி!!

சின்னத்திரையில் நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருப்பவர் மகாலட்சுமி. இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா?’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராகவும் இருந்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 4 தான் இவரை மக்களிடம் டிரெண்டிங் ஆக்கியது.
வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது, நிர்கதியாக விடப்பட்ட பீட்டர் பவுலின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரவீந்திரன் உறுதுணையாக பல்வேறு உதவிகளை செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வரும் ரவீந்திரன் அண்மையில் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.