ரசிகர்கள் மகிழ்ச்சி!! நடிகை நயன்தாராவை இன்று கரம் பிடிக்கிறார் விக்னேஷ் சிவன்!!
Jun 9, 2022, 10:22 IST

6 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம். இவர்கள் திருமணம் இன்று காலை மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. அவர்கள் திருமணத்துக்காக பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மெஹந்தி விழாவுடன் கோலாகலமாக தொடங்கிய திருமணத்தில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அவர்கள் திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக ஷாருக் கான் சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்தை படம்பிடிக்க நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் உரிமம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர தம்பதிகளுக்கு இன்று திருமணம் நடப்பதை அவர்களது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.