Movie prime

ரசிகர்கள் அதிர்ச்சி!! காயத்தில் குஷ்பு!! வைரல் புகைப்படம்!!

 
kushboo

தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பு 1990 களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர். மகாராஷ்டிராவில் பிறந்த குஷ்பு குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி, தென்னிந்திய திரையுலகில் உச்ச நடிகையாக திகழ்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையை இருந்த போதே, சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்பு 50 வயதை கடந்தும் இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இளமையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். 

தற்போது, சினிமா, தொலைக்காட்சி தொடர், அரசியல், தயாரிப்பு என்று எப்போதும் பரபரப்பாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறார். மேலும், அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது, அவர் வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்த போது, விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

kushboo

மேலும், இந்த காயத்தால் தனது பயணம் தடைபடாது என்றும் சாதிக்கும் வரை தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.