ரசிகர்கள் அதிர்ச்சி!! தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் திடீர் மரணம்!!
Dec 27, 2022, 06:39 IST

தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கே.பி.சஷி காலமானார். 64 வயதாகும் இவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இவரது திடீர் மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சஷி கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான கே.தாமோதரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 1994 ஆம் ஆண்டு வெளியான ‘இலையும், முள்ளும்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குனர் சஷி. மேலும், அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல ஆவணப் படங்களையும் இயக்கியுள்ள இவர், படிக்கும் போதே கார்ட்டூன் துறையில் பணியாற்றியவர். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'ஏக் அலக் மௌசம்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், இவர் பல்வேறு மறக்க முடியாத படங்களை கொடுத்துள்ளார். தற்போது, இயக்குனர் கே.பி.சஷியின் மரணம் மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.