Movie prime

ரஜினிகாந்த், திருப்பதியில் மகளுடன் சாமி தரிசனம்!!

 
rajini in thirupathi
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்தார். நேற்று திருப்பதி சென்ற அவரை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று அதிகாலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று அதிகாலை மகளுடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டார். மேலும், சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
rajini in thirupathi
அதை தொடர்ந்து, தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தலைவா, தலைவா என்று உற்சாகமாக கோஷம் போட்டனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய அவர் 6 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
rajini in thirupathi
மேலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவருக்கு நேற்றே வாழ்த்து தெரிவித்து விட்டேன். சாமி கும்பிட வந்த இடத்தில் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி உரையை முடித்துக் கொண்டார்.