அதிர்ச்சி!! 20 வயதே ஆன இளம் நடிகை படப்பிடிப்பு தளத்திலேயே தற்கொலை!!

பிரபல சீரியல் நடிகை துனிஷா ஷர்மா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். 20 வயதாகும் இவர் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த போது மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் உடனே மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். துனிஷா, அலி பாபா தஸ்கான் - இ- காபூல் என்ற தொலைக்காட்சி தொடரில் முன்னணி நடிகையாக இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு தளத்தில் துனிஷா டென்ஷனாக இருந்து வந்தார் என்றும் 5 மணி நேரத்திற்கு முன்பு தான் துனிஷா செட்டில் இருந்து தான் மேக்அப் செய்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' ஆகிய பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன் "தங்கள் ஆர்வத்தால் உந்தப்படுபவர்களை தடுக்க முடியாது" என்றும் பதிவிட்டிருந்தார்.
மேலும், 'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ' படங்களிலும் துனிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் திடீரென தற்கொலை செய்துள்ளது இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.