Movie prime

அதிர்ச்சி!! மீண்டும் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி!! சோகத்தில் ரசிகர்கள்!!

 
samantha in hospital
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தமிழில் கடைசியாக “காத்து வாக்குல இரண்டு காதல்” நடித்துள்ளார், மற்றும் தெலுங்கில் “குஷி” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் தற்போது, "யசோதா” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
sam in hos
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பகிர்ந்தார். மேலும், விரைவில் குணமடைவேன் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், அவர் நடிப்பில் வெளியான யசோதா படத்தின் ப்ரோமோஷன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், படத்தின் ப்ரோமோஷன் பெட்டியில் கலந்து கொண்ட அவரிடம் அவரது நோய் பற்றி கேட்ட போது கண்ணீருடன் பதிலளித்தார்.
sam in hos
இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நோயின் தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? இல்லை வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.