அதிர்ச்சி!! பிரபல தொலைக்காட்சி நடிகை மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!
Nov 14, 2022, 07:45 IST

பிரபல தொலைக்காட்சி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் கடந்த சனிக்கிழமை இரவு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். 32 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணி, துஜ்யத் ஜீவ் ரங்கலா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா போன்ற பிரபல மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டிற்கு சாங்லி - கோலாப்பூர் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

வழியில் உள்ள ஹலோண்டி சந்திப்பிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, இவரது இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்யாணி, பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.