Movie prime

அதிர்ச்சி!! பிரபல தமிழ் காமெடி நடிகர் திடீர் மரணம்!!

 
ramaraj
தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் திரையுலகைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரபல காமெடி நடிகர் ராமராஜன் நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு திரை உலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் பாலாவின் ‘அவன்  இவன்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து, அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் ராமராஜன் (72). இவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் அவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
avanivan
அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் ராமராஜ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை உடன் இருந்து கவனித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகர் ராமராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராமராஜனின் ராஜின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.