Movie prime

அதிர்ச்சி!! பிரபல நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!!

 
pradap pothan

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று காலமானார். 69 வயதாகும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

pradap pothan

இவர், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் போன்ற சிறந்த தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இவர் இயக்கிய ஒரு காதல் கதை என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pradap pothan

தமிழில் முதல் முறையாக நடிகர் கமலின் திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியது இவரே. மேலும் இவர் பல பிலிம்பேர் விருதுகளையும், மலையாள மாநில திரைப்பட விருதை பெற்றுள்ளார்.