Movie prime

அதிர்ச்சி!! பழம்பெரும் சின்னத்திரை நடிகை அடித்து கொலை!!

 
veena kapoor
பிரபல சின்னத்திரை நடிகை வீணா கபூர் என்பவர், அவரது சொந்த மகனாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதாகும் அவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருந்தவர். திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் பல உதவிகளைச் செய்துள்ளார்.
veena kapoor
1979 ஆம் ஆண்டு வெளியான ‘டில் டில் டா லேகா’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் பழம் பெரும் நடிகை வீணா கபூர். அதை தொடர்ந்து, ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா’, ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ ஆகிய இந்தி படங்களின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார்.
veena kapoor
மகாராஷ்ட்ரா மாநிலம் ஜூஹுவில் உள்ள கல்பதரு சொசைட்டி பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே அவரது மூத்த மகன் சச்சின் கபூர் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை காலி செய்துவிட்டு வீணா வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர். வீணாவின் 2 ஆவது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் வீணாவுக்கு போன் செய்த நிலையில், வீட்டில் யாரும் போன் எடுக்காததால், ஜூஹூ காவல் நிலையத்தில் தனது தாயை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
veena kapoor, sachin
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீணா கபூர்  வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வீணா கபூரின் மூத்த மகன் சச்சின், வீட்டு பணியாள் சோட்டு மற்றும் லாலு குமார் மண்டல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சொத்து தகராறில் வீணா கபூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக சச்சின் தனது தாய் வீணாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
rip
இந்த தகராறு காரணமாக, ஏற்பட்ட ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை அடித்து கொன்றதோடு மட்டுமல்லாமல், உடலை வீட்டில் இருந்து 90 கி மீ தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் இந்தி திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.