Movie prime

அதிர்ச்சி!! மகேஷ் பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

 
mahes babu and father
தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கிருஷ்ணா. அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். 80 வயதாகும் நடிகர் கிருஷ்ணா நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை உடனே ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
mahes babu and father
மருத்துவமனையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் சுயநினைவை அடைந்துள்ளார். அதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
mahes babu and father
மேலும், அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்ததும் அவரது ரசிகர்கள், உறவினர்கள், பிரபலங்கள் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் கிருஷ்ணா 2016 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் திரைவாழ்க்கையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
rip
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயை இழந்த நடிகர் மகேஷ் பாபு தற்போது தந்தையையும் இழந்துள்ளார். அடுத்தடுத்து இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.