Movie prime

அதிர்ச்சி!! சோகத்தில் குஷ்பு!! அவரது அண்ணன் திடீர் மரணம்!!

 
kushboo sad
பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் அண்ணன் நேற்று காலமானார். குஷ்பு சமீபத்தில், தனது மூத்த சகோதரர் அபூபக்கர் உயிருக்குப் போராடிக் கொண்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
kushboo family
அதில், கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்து வருகிறார் என்றும் நேற்று முன்தினம் தான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது என்றும் அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், சரத்குமார் என்று பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் தீவிரமாக களமிறங்கி உள்ளார்.
kushboo family
இந்நிலையில், நேற்று குஷ்புவின் சகோதரர் அபூபக்கர் காலமானார். இந்த தகவலை, நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, அவர்கள் உங்களை விட்டு விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது.
rip
அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும் என்றும், அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.