அதிர்ச்சி!! வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மரணம்!!
Dec 3, 2022, 09:22 IST

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணியளவில் உயிரிழந்தார். இவர் கிட்னி செயலிழந்து உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்து புகழ் பெற்றவர். அதிலும், வெண்ணிலா கபடி குழு படத்தில் இவரது நடிப்பு மக்களை கவரும் விதத்தில் அமைந்தது.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அவருக்கு முன்னரே சர்க்கரை நோயும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார் என்று கூறப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.