அதிர்ச்சி!! 15 நாட்களில் 4 ஆவது தற்கொலை!! 18 வயது மாடல் அழகி தற்கொலை!!
May 31, 2022, 13:15 IST

கடந்த 2 வாரங்களில் கொல்கத்தா மாடலிங் உலகில் இது 4 ஆவது தற்கொலை. அதே போல, கடந்த 2 வாரங்களில் கேரளா மாடலிங் மற்றும் திரை உலகை சேர்ந்த 3 அழகிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலத்தின் இந்த மூன்று மரணங்களும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி சந்தேக மரணம் என்று பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர். தற்போது, அதே போல் பெங்காலி அழகிகளின் அடுத்தடுத்து தற்கொலைகளும் தொடர்ந்து அதிர வைக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது மாடல் அழகி, சரஸ்வதி தாஸ். இவர் மாடலிங் துறையில், பிரகாசித்து வருவதோடு, பள்ளி குழந்தைகளுக்கும் டியூஷன் எடுத்து வருகிறார். அவர் குழந்தையாக இருந்த போதே இவரது தந்தை இறந்துவிட்டதால், இவரும் இவரது தாயும் இவரது தாய் மாமாவின் பராமரிப்பில் வாழ்ந்துள்ளனர்.

அவர் தினமும் அவரது பாட்டியுடன் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று இரவு 2 மணி ஆகியும் அவர் தூங்க வராததால், அவரது பாடி அவரை பக்கத்து அறையில் தேடியபோது, அங்கு அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது, கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர்.
குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அவர் ஒரு இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் தூக்கு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை அவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்காலி திரைத்துறையில் கடந்த 15 நாட்களில் இது நான்காவது தற்கொலை வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பல்லவி டே என்ற பிரபல தொலைக்காட்சி நடிகை கொல்கத்தாவின் கர்ஃபா பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் இறந்து கிடந்தார். கடந்த வாரத்தில் நடிகை பிதுஷா அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிதுஷா இறந்த 2 நாட்களில் அவரது நெருங்கிய தோழியான மாடல் அழகி மஞ்சுஷா நியோகியும் அவரது குடியிருப்பில் தற்கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் தொடர்ந்து அடுத்தடுத்த நடந்ததால் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.