Movie prime

அதிர்ச்சி!! பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம்!! பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!

 
k.k.
பிரபல திரைப்பட பின்னணி இசைப் பாடகர் கே.கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்ற இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேலும் அதிகமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
kk
இவரின் திடீர் மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இறப்பதற்கு முன்னரே இவர் பங்குபெற்ற மேடை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது, அதனால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இவர் 1968 ஆம் ஆண்டு டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்துள்ளார். இவர் திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3,500க்கும் மேற்பட்ட சிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். மேலும், 1999ம் ஆண்டு கிரிக்கெட்  உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன் முதலில் திரையில் பாடியுள்ளார்.

இவர் தமிழ் உட்பட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். இவர் தமிழில் மின்சார கனவு, செல்லமே,  காக்க காக்க ,7ஜி ரெயின்போ காலனி, காவலன், மன்மதன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,  அந்நியன் ,ரெட் ,கில்லி உள்ளிட்ட பல்வேறு படங்களில் 66 பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடல்களில் பெரும்பாலானவை ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளன.
pm modi
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல், கமல் ஹசன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.