சோகம்!! நடிகர் வடிவேலுவின் தாய் காலமானார்!!
Updated: Jan 19, 2023, 08:51 IST

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி. 87 வயதாகும் இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு மதுரையில் பிறந்ததால், அவருக்கு வைகைப்புயல் என்று ரசிகர்கள் பட்டம் கொடுத்தனர்.

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான ”என் தங்கை கல்யாணி ” என்ற படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் அறிமுகமானார், வடிவேலு. அதன் பின்னர், என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், அரண்மனை கிளி ஆகிய படங்களில் அவரது தனி பாணி நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் அவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் அமைந்தன. அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகிவிட்டார். அதே போல் சில சர்ச்சைகளால் சினிமா பக்கம் மீண்டும் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர், தற்போது மீண்டும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

அவர் தனது குடும்பத்துடன் மதுரையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்த வடிவேலுவின் தாயார் திடீரென நேற்று இரவு காலமானார். இதனால், அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.