Movie prime

சோகத்தில் திரையுலகினர்!! பிரபல பாடகர், பாடலாசிரியர் மரணம்!!

 
nihal nelson

பிரபல பாடகரும், பாடலாசிரியருமானவர், நிஹால் நெல்சன் என்பவர். இலங்கையை சேர்ந்த இவர் நேற்று இலங்கையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

nihal nelson

76 வயதாகும் இவர் இலங்கையில் சி.டி. மூலமாக முதன் முதலில் பாடல் வெளியிட்டவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் பிரபல பாடகராக மட்டுமின்றி பல பாடல்களை இயற்றியும் உள்ளார். இந்நிலையில், அவருக்கு நேற்று தனது வீட்டில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rip

பாடசாலை பருவத்தில் சங்கீதம் பயின்ற நிஹால், 1962 ஆம் ஆண்டு தான் எழுதிய பாடல் ஒன்றை திருமண நிகழ்வொன்றில் முதன் முதலாக பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பைலா பாடல்களை பாடி புகழ்பெற்ற இவர், இதுவரை கிட்டத்தட்ட 113 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பைலா பாடல்கள் அதன் குரலை இழந்து விட்டது என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.