Movie prime

வரலாற்று சாதனை!! ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்!!

 
naatu naatu
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் உலக திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் உள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
naatu naatu oscar
'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சிறந்த மூலப் பாடலுக்கான பிரிவில் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
naatu naatu oscar
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விழாவின் இந்த பகுதியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கை உற்சாகப்படுத்தினர். இந்த நாட்டு நாட்டு பாடலை கால பைரவா, ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியவர்கள் பாடியுள்ளனர்.