Movie prime

சாதனை!! தமிழக நீலகிரி தம்பதிகள் நடித்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது!!

 
the elephant whisperer
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் உலக திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) பெற்றுள்ளது.
the elephant whisperer
கார்திகி குன்செல்வெஸ், நீலகிரி தம்பதியை பற்றி இயக்கிய 'The elephant whisperers' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த ஆவண குறும்படம் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள பொம்மன் - பெல்லி என்ற தம்பதி பற்றிய ஆவண குறும்படம்.
director
இந்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால், பலரும் பாராட்டி வருகின்றனர். ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ படத்திற்காக இயக்குனர்கள் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் குனெட் மொன்கோ ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர். தற்போது, இந்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.