Movie prime

நடிகர் அர்ஜுனின் மகளுக்கு விரைவில் திருமணம்??

 
arjun family
ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளுக்கும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு பெண்கள் உள்ளனர். அவர்களில் ஐஸ்வர்யா விஷால் நடித்த ’பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
arjun family
இந்நிலையில், தற்போது நடிகர் அர்ஜுன் அவரது மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா என்று கூறப்படுகிறது. உமாபதி ராமையா ‘அதாங்கப்பட்டது மகாஜனங்களே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
umapathy ramaiah
அதன் பின்னர், ’மணியார் குடும்பம்’ ’திருமணம்’ ’தண்ணி வண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் இவர்களது திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.