Movie prime

நடிகர் பிரபு திடீர் உடல்நல பாதிப்பு!! ,மருத்துவமனையில் அனுமதி!!

 
prabhu
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகர் பிரபு கணேசன். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, கடந்த 20 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
prabhu
இவருக்கு நேற்று 21 ஆம் தேதி சிறுநீரக கல் அகற்ற பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு நடைபெறும் பொதுவான மருத்துவ சோதனைகளை மேற்கொண்ட பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாபெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மகனான இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து, புதிய சங்கமம், கோழி கூவுது, நீதிபதி, சந்திப்பு என அடுத்தடுத்த பல வெற்றி படங்களில் நடித்து திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில், இவர் இதுவரை 215 படங்களில் நடித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு புனித என்பவரை திருமணம் செய்து ஐஸ்வர்யா பிரபு, என்று ஒரு மகளும் விக்ரம் பிரபு என்று ஒரு மகனும் இவருக்கு உள்ளனர்.
prabhu
இவர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி என்ற திரைப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல இடத்தை பெற்று தந்தது. கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான  மாபெரும் வெற்றிப் படம் பொன்னியின் செல்வனில் பிரபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பிரபு விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டுதல்  செய்து வருகின்றனர்.