பழனி முருகன் கோவில் படிகளில் சூடம் ஏற்றி வழிபட்ட நடிகை சமந்தா!!
Updated: Feb 14, 2023, 07:40 IST

பழனி முருகன் கோவில் படிகளில் நடிகை சமந்தா சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்துள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா. தமிழில் வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன் பின்னர், தெலுங்கு திரையுலகில் கால் பதித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர், பின்னர் தமிழிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, அஞ்சான், தெறி, 24, தங்கமகன் என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் என்ற வரலாற்று சிறப்புமிக்க படம் திரையிடப்பட உள்ளது.

மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட தகவலை நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தானே பகிர்ந்தார். மேலும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், இவர் பழனி முருகன் கோவிலில் படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால், தனது நோய்காக சமந்தா வேண்டுதல் வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது.