Movie prime

தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட வேண்டாம்!! உளவுத்துறை எச்சரிக்கை!!

 
the kerala story
தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரீ' படத்தை வெளியிட வேண்டாம் என்று மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில திரைப்படங்கள் மக்கள் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சில திரைப்படங்கள் பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும், சில திரைப்படங்களுக்கு மக்களிடம் கடுமையான எதிர்ப்பு உண்டாகும்.
the kerala story
அந்த வகையில், அண்மையில் ஹிந்தியில் வெளியான இயக்குநர் சுதிப்டோ சென்னால் இயக்கப்பட்ட படம்  'தி கேரளா ஸ்டோரீ'. இந்த திரைப்படத்திற்கு கேரளா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நாடு முழுவதும் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் வெளியாக உள்ளது.
the kerala story
இந்நிலையில், இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்று மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்  'தி கேரளா ஸ்டோரீ' படத்தை வெளியிட்டால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்றும் அதனால் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.