Movie prime

ரசிகர்கள் அதிர்ச்சி!! லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து!!

 
leo vijay
இளைய தளபதி நடிகர் விஜய் நடிப்பில்  அக்டோபர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்நிலையில் ‘லியோ’ படத்தின் ஐமேக்ஸ் வெர்ஷன் பிரீமியர் ஷோக்கள் அமெரிக்காவில் ரத்தாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவை, மதுரை, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
leo song
ஆனால், வெளிநாடுகளில் கடந்த மாதமே படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ’லியோ’ படத்தின் பிரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’லியோ’ படத்தின் பிரீமியர் காட்சி அமெரிக்காவில் அக்டோபர் 18 ம் தேதியே திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ’லியோ’ ஐமேக்ஸ் வெர்ஷனுக்கான பிரீமியர் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
leo vijay
படம் அனுப்ப தாமதமானதால் தான் அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட இருந்த பிரீமியர் காட்சிகளை ரத்து செய்துள்ளனர்.அதற்காக டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் ஐமேக்ஸ் அல்லாத திரையரங்குகளில் ’லியோ’ திட்டமிட்டபடி ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது