Movie prime

ரசிகர்கள் மகிழ்ச்சி!! மீண்டும் இணையும் 'பிரேமம்' ஜோடி!!

 
premam
மலையாள திரையில் அல்போன்சு புத்திரன் இயக்கத்தில் வெளியாகி தென்னிந்திய அளவில் பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகப்பெரிய வெற்றி படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என்று பலர் நடித்துள்ளனர்.
premam
இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்த போதும் மலரே நின்னை காணாதிருந்தால்... பாடலில் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இளம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படம். இந்த படத்தில் நடித்த நிவின் பாலி - சாய் பல்லவி ஜோடி இளைஞர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி.
premam
அதன் பின்னர், நிவின் பாலி - சாய் பல்லவி ஜோடி இணைந்து வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த ஜோடி இணைந்து 'தாரம்' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து இன்னும், உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் இந்த செய்தியை வேகமாக பரப்பி வருகின்றனர்.