Movie prime

சோகத்தில் திரையுலகம்!! பிரபல நடன கலைஞர் காலமானார்!!

 
sheeba
பிரபல நடன கலைஞர் ஷீபா ஷியாமபிரசாத். இவர் பிரபல இயக்குனர் ஷியாமபிரசாத்தின் மனைவி. 59 வயதாகும் இவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கிம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ஷீபா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
sheeba
ஷீபா ஷியாமபிரசாத் நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனில் தொகுப்பாளராகவும், எஸ்பிஐ அதிகாரியாகவும் பணிபுரிந்தவர். தூர்தர்ஷனில் அறிவிப்பாளர் மட்டுமின்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் ஷியாமபிரசாத்தை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
rip
ஷீபா - ஷியாமபிரசாத் தம்பதிக்கு விஷ்ணு, சிவகாமி என்று இரு பிள்ளைகள். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3.30 மணிக்கு தைக்காடு சாந்தி கவடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.