சோகத்தில் திரையுலகம்!! பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் மரணம்!!
Mar 13, 2023, 08:07 IST

பிரபல மலையாள இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 75 வயதாகும் இவர் கந்தவ ராத்திரி, அழகனந்தா, பூநிலவு, அழகனந்தா, அன்பற அச்சமா, அவள் திரௌபதி, அனுயாத்ரா உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்துள்ளார்.
என்.பி.பிரபாகரன் இசையில், யேசுதாஸ், பி ஜெயச்சந்திரன், உன்னி மேனன், சுஜாதா உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் பாடி உள்ளனர். மேலும், என்.பி.பிரபாகரன் கேரளா சங்கீத நாடக அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். இதை தவிர இவர் பல தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்களுக்கு இசையமைத்துள்ளார்.

என்.பி.பிரபாகரனுக்கு உஷா குமாரி என்ற மனைவியும் ஆனந்த் பிரபு, அனிஷ் பிரபு என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இவர் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சக பயணிகள் ரயில்வே பணியாளர்களை அழைத்து தகவல் அளித்ததை தொடர்ந்து என்.பி.பிரபாகரன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

என்.பி. பிரபாகரன் அவர்களின் மரணம் காரணமாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும், மலையாள திரையுலகினரும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் என்.பி.பிரபாகரன் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.