Movie prime

திரையுலகினர் வாழ்த்து!! நடிகர் ராம் சரண் மனைவிக்கு வளைகாப்பு!!

 
ram charan

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள் உபாசனாவிற்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். இவரது ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று கொடுத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், அதே நேரத்தில் மனைவி உபாசனா கர்ப்பமடைந்த மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

upasana

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தெலுங்கில் ‘சிறுத்தை’ படத்தின் மூலமாக அறிமுகமானார். ராம் சரணுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது. ஒரே படத்தில் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ராம் சரண், அதன் பின்னர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ‘மாவீரன்’  படமும் மெகா ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது.

ram charan

கடந்த ஆண்டு மீண்டும் ராஜமௌலியுடன் இணைந்து 'ஆர்.ஆர்.ஆர்’. படத்தில் நடித்தார். இந்த படம் ஆஸ்கர் விருது வென்று உலக அளவில் வரவேற்பை பெற்றது. மேலும், தற்போது ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இந்த கொண்டாட்டங்களோடு, மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியையும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார் ராம் சரண். தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.