Movie prime

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

 
aiswarya rajinikanth
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும், கடந்த ஆண்டு நடிகர் தனுஷுடனான விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.
aiswarya rajinikanth
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டு லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
gold
மேலும், வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் நகைகளை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.