Movie prime

அதிர்ச்சி!! நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!!

 
kushboo
நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினருமான குஷ்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். நடிகை குஷ்பு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
kushbo
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் வலி அதிகமாக உள்ளதாகவும், உடல்நிலை பலவீனமாக உள்ளதாகவும் நடிகை குஷ்பு தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார், நடிகை குஷ்பு.
kushbo
மேலும், அவர் உடலில் ஏற்படும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும், அதை புறம் தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது, விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.