Movie prime

அதிர்ச்சி!! தந்தை இறந்த உடனே உயிரிழந்த பிரபல நடிகர்!!

 
angus cloud
பிரபல சின்னத்திரை நடிகர் ஆங்கஸ் க்ளவுட். இவர் ஆங்கில தொலைக்காட்சியான ஹெச்.பி. ஓ தொலைக்காட்சி நெடுந்தொடரான `Euphoria' தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் அமெரிக்காவின் ஆங்கஸ் க்ளவுட் . இவர் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். இருவரும் நண்பர்கள் போலவே பழகி வந்தனர். பொது இடங்களிலும்  தந்தை மகன் உறவு போல அல்லாமல் இணைபிரியாமல் இருந்து வந்தனர்.
angus cloud
இந்நிலையில் இவரது தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார்.  தந்தையின் மறைந்ததை அவரால்  ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன் பிறகு யாருடனும் பேசவும் இல்லை. உண்ணவும் இல்லை.   தனது குடும்பத்தினருடன் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்தார். தந்தை , மகன் பாசம் அறிந்ததால் சிறிது நாளில் சரியாகி விடுவார் என யாரும் அவரை தொந்தரவு செய்யவும் இல்லை.  
rip
தந்தையின் திடீர் மரணத்தால், ஆங்கஸ் அதிக  மன அழுத்தத்தில் இருந்தார். அந்த மன அழுத்தத்தால் அவர் உயிரிழ்ந்து விட்டார்.  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்த ஆங்கஸ், தந்தை இறந்த சில தினங்களே ஆன நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் உறவினர்கள், நண்பர்கள்,  குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வட்டாரத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பு குறித்து காவல்துறை  விசாரணை நடத்தி வருகிறது.