அதிர்ச்சி!! பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் காலமானார்!!
Mar 22, 2023, 09:28 IST

பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா என்பவர் இன்று காலமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். கோவை குணா கவுண்டமணி, சிவாஜி, ராதாரவி உள்ளிட்டோரின் குரல்களை மிமிக்ரி செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

சென்னை காதல் என்ற படத்தில் அவர் துணை நடிகராகவும் நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், கோவை குணா. சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு கலைஞர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வில் கோவை குணா பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி கோவை குணா இன்று மரணமடைந்தார். அவரது மறைவு சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.