Movie prime

அதிர்ச்சி!! பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!! ரசிகர்கள் சோகம்!!

 
akansha dubey
பிரபல இளம் நடிகை 25 வயது கூட நிறைவடையாத நிலையில், ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல போஜ்புரி நடிகை ஆகான்க்சா துபே தனது 17 ஆவது வயதில் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தார்.
akansha dubey
17 வயதாகில் ‘மேரி ஜங் மேரா பைஸ்லா’ என்ற படத்தில் அறிமுகமானார் துபே. அதற்கு பிறகு, போஜ்புரியில் முஜ்சே ஷாதி கரோகி, வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் 60 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கூட அவர் ஒரு பாடலுக்கு செலஃபீ வீடியோ ஒன்றை எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வளவு சந்தோசமாக இருந்த அவர் எப்படி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
thokku
மேலும், நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவரும் ஆகான்க்சா துபேயும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து கடந்த காதலர் தினத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் துபே பதிவிட்டிருந்தார். இந்நிலையில், துபே திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.