Movie prime

அதிர்ச்சி!! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் தற்கொலை!! சோகத்தில் உறவினர்கள்!!

 
vijay antony
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
vjay antony meera
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு மீரா வழக்கம்போல் தனது அறையில் உறங்க சென்றுள்ள நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி மீராவின் அறைக்கு சென்று பார்த்த போது, மீரா ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
thokku
இதை தொடர்ந்து, வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் உதவியுடன் காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். இது குறித்து தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.