Movie prime

அதிர்ச்சி!! வளர்ந்து வரும் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!!

 
katrukkena veli
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரில் நடித்து வரும் நடிகர் ஹரி தற்கொலை செய்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது.
hari
கடந்த ஒரு ஆண்டு காலமாக விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி தொடர் வெளியாகி வருகிறது. இந்த தொடர் கல்லூரியை மையமாக கொண்ட கதைக்களமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் நாயகியின் தோழராக நடித்துள்ளார், நடிகர் ஹரி. தொடர்ந்து, தவமாய் தவமிருந்து என்ற தொடரிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கவனம் பெற்று வரும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
hari
அவரது மறைவு செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்து வரும் நேரத்தில் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.