Movie prime

அதிர்ச்சி!! இசைஞானி இளையராஜா வீட்டில் திடீர் சோகம்!!

 
ilayaraja pavalar sivan
இசைஞானி  இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்னுடைய மகன் பாவலர் சிவன்.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  
pavalar sivan
60 வயதாகும் சிவன் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் இணைந்து பணிபுரிந்து வந்தார். கிதார் இசைக்கலைஞரான சிவன் சில படங்களுக்கு தனியாகவும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக நண்பர்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  
rip
இவரது மறைவு குறித்து திரைப்பட இசையமைப்பாளர் தினா, இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் மகன் கிதார் இசை கலைஞர் சிவராமன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.