Movie prime

அதிர்ச்சி!! பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் திரையுலகம்!!

 
mathasu krishna
தென்னிந்திய திரைப்பட ரசிகர்களுக்கு ’பாரத் பந்த்’ திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகர் கிருஷ்ணா. இவர், தனது திரைப்பயணத்தை ஆடை வடிவமைப்பாளராக தொடங்கினார். இவர், என்டிஆர் காலம் தொடங்கி அவரது பேரன் காலம் வரை ஆடை வடிவமைப்பில் அசத்தி வந்தார்.
mathasu krishna
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் மாதாசு கிருஷ்ணா. கடந்த 1954 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், என் டி ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, வாணிஸ்ரீ, ஜெயசுதா, ஜெயபிரதா, ஸ்ரீதேவி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.

இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய 'பாரத் பந்த்' திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து, 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
rip
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார். தெலுங்கு திரைத்துறையில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவு, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமன்றி, தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.