Movie prime

அதிர்ச்சி!! இளம் இயக்குனர் திடீர் மரணம்!! சோகத்தில் திரையுலகம்!!

 
manu james
இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் என்பவர் மலையாள திரையுலகில் பல குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். தொடர்ந்து, தனது முதல் திரைப்படமாக 'நான்சி ராணி' என்ற படத்தை இயக்கி வந்துள்ளார். அந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
manu james
இயக்குனர் மனு ஜேம்ஸ் அஹானா கிருஷ்ணா, சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடிப்பில், 'நான்சி ராணி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் இருக்கிறது.

மனு ஜேம்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு, குழந்தை நடிகராக 'ஐ ஆம் கியூரியஸ்' திரைத்துறையில், நுழைந்தார். அதன் பின்னர், மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட்டில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்து உள்ளார். 31 வயதாகும் இவருக்கு நைனா மனு ஜேம்ஸ் என்ற மனைவி உள்ளார்.
manu james
தனது முதல் படத்தை இயக்கி வந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரான குறவிலங்காட்டில் நடைபெற உள்ளது.