தமிழ் திரையுலகின் பிரபல இசைக்கலைஞர் திடீர் மறைவு!! சோகத்தில் ரசிகர்கள்!!
Mar 24, 2023, 09:21 IST

தமிழ் திரையுலகில் தற்போது அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதனால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் சோகத்தில் உள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி, மிமிகிரி கலைஞர் கோவை குணா என்று அடுத்தடுத்து நடிகர்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தற்போது 43 வயதாகும் பிரபல கிடாரிஸ்ட் இசைக்கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் காலமானார். ஸ்டீவ் வாட்ஸ் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசை அமைப்பாளர்களிடம் கிடார் வாசித்துள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவர் நேற்று இரவு 10 மணிக்கு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாரணம் ஆயிரம்' படத்தில் நெஞ்சுக்குள் பெய்திடும், போடா போடி படத்திலிருந்து போடா பொடி, மற்றும் பீமா படத்தில் ஒரு முகமோ என்று பல பிரபலமான பாடல்களுக்கு கிடார் இசைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிடார் வாசிக்க ஆர்வம் காட்டிய பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இசை பயிற்சி வழங்கி வந்தார். இந்நிலையில், இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.