Movie prime

தொடரும் சோகம்!! பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்!!

 
kiran govi
திரையுலகில் அடுத்தடுத்து கலைஞர்கள் திடீர் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரு-கன்னட திரையுலகின், பிரபல இயக்குனர் கிரண் கோவி, மாரடைப்பால் நேற்று மார்ச் 25 ஆம் தேதி பிற்பகல் காலமானார்.  
kiran govi
43 வயதாகும் இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், நடிகர்கள், உறவினர்கள், நண்பர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். பயணா, யாரிகே யாருன்டு, பாரு வைப் ஆப் தேவதாஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். நேற்று பிற்பகல் தன் அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
rip
அப்போது கிரண் கோவிக்கு எதிர்பாராமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.