Movie prime

சோகம்!! நடிகர் அஜித்தின் தந்தை மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
ajith

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ajith family

நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் மற்றும் தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்  காரணமாக, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ajith

இந்த  சம்பவத்தால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் அவரது தந்தையின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.