அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை!! ஒரே நாளில் ₹35 குறைப்பு!!
Updated: Jul 3, 2023, 08:23 IST

காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி பழம் கிலோ ₹5 வரை விலை குறைந்து விற்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தக்காளி பழங்களின் விலை கிலோ ₹100 ஐ தாண்டி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை ₹100 ஐ தாண்டியதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை கோயம்பேடு நேற்று வரத்து குறைவு காரணமாக, ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ₹120 ஆகவும் சில்லறை விலையில் ₹130 ஆகவும் இருந்தது.

இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்தை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சென்னை கோயம்பேடு சந்தைக்கு 130 லாரிகளில் தக்காளி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நேற்று ₹130 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ₹35 குறைந்து ₹95 க்கு விற்கப்படுகிறது.