Movie prime

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மருந்து மாத்திரைகளின் விலை 12% உயர்வு!!

 
tablets
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் வலி நிவாரணிகள், இதயம் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 400 வகையான மருந்துகள் மீதான விலை, 12.1% உயர்கிறது. மத்திய அரசின் மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
tablets
பொதுவான காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் பாராசிட்டமால் தொடங்கி, சளி, இருமல், காய்ச்சல் மருந்துகள், இதயம், ரத்த அழுத்தம் சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்துகள், வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் உள்ளிட்ட 800 விதமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர போகும் மருந்துகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
tablets
கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் குறிப்பிட்ட 800 வகையான மருந்துகள் மீதான விலை, 10 முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, தயாரிப்பு செலவீனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகள் மீதான விலையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் 12% அளவுக்கு மருந்துகள் விலை உயர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.