Movie prime

பூமியை நோக்கி வரும் 1600 அடி கோள்!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

 
asteroid

நாளை மறுநாள் அதாவது வருகிற 16 ஆம் தேதி அன்று பூமியை ஒரு சிறுகோள் மோத உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அந்த சிறுகோளுக்கு 388945 என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த சிறுகோள் 1,608 அடி அகலமும், 1,454 அடி உயரமும் கொண்டு உள்ளது. வரும் 16 ஆம் தேதி அன்று அதிகாலை 2.48 மணிக்கு பூமியை நெருங்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சிறுகோள் ஆனது ஈபிள் கோபுரம், லிபர்ட்டி சிலையை விட பெரியது என்றும், நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்திற்கு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அந்த சிறு கோள் சூரியனை சுற்றி வரும் போது ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வருவது வழக்கமாக உள்ளது. இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு பூமிக்கு 1.7 மில்லியன் மைல் தூரத்திற்கு இந்த சிறுகோள் வந்து சென்றது. இதை போல் அடுத்து 2024 ஆம் ஆண்டு பூமிக்கு 6.9 மில்லியன் மைல் தூரத்திற்கு இந்த சிறுகோள் வந்து செல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது. இவ்வாறு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு வரும் சிறுகோள் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்ற எதிர்பார்ப்பு விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது.